கோமதி அருண்

关于作者

அன்புத் தோழமைகளே!!! திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த நான் திருமணத்திற்கு பிறகு சென்னையில் குடியேறியுள்ளேன். ‘வாங்க பழகலாம்’ என்று சொல்வது போல் ‘வாங்க எழுதலாம்’ என்று தான் நான் சொல்வேன். ஏனென்றால் கொஞ்சமே கொஞ்சம் கற்பனை வளம் இருந்தால் போதும், கதை எழுதுவது பெரிய விஷயமே இல்லைங்க.. இல்லையென்றால் B.E. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து (திருமணத்திற்கு முன்) பொறியியல் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய நான் கதை எழுத முடியுமா? நான் முதல் முதலாக ஒரு கதை புத்தகத்தை படித்தது கல்யாணத்திற்கு பிறகு 2009யில் தான் அதுவும் என் அம்மாவின் வற்புறுத்தலில்.. அதன் பிறகு இணையத்தில் கதைகளை தேடி தேடி படிக்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் ‘நாமும் கதை எழுதினா என்ன!’ என்று தோன்றி 2011ஆம் ஆண்டு ‘கோமதி அருண்’ என்ற பெயரில் முதல் கதையை இணையத்தில் எழுதினேன். எனது கதைகளுக்கு இணையத்தில் கிடைக்கும் நல்ல வரவேற்பை முன்னிட்டு தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். இடையில் குழந்தை பேறு குழந்தை வளர்ப்பு என்று மூன்று ஆண்டுகள் எழுதவதற்கு இடைவெளி விட்டிருந்தேன். எனது 10 கதைகள் புத்தகமாக வெளிவந்திருக்க, தற்போது 19வது கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். பெரும்பாலான எனது கதைகள் சுவாரசியமான எதிர்பாரா திருப்பங்களும் நகைச்சுவையும் கலந்த குடும்ப காதல் கதைகளே! ஒரு சில க்ரைம் நாவல்களும் எழுதி இருக்கிறேன்.. எனது கதைகளின் பட்டியல்: 1. என்னுள் நிறைந்தவனே!! 2. யாருக்கு யாரோ?? 3. மழைக்காலம் (முதல் பாகம் மட்டும் முடிந்திருக்கிறது) 4. தீண்டத் தீண்ட மலர்வதென்ன!! (இரண்டு பாகங்கள் கொண்ட கதை) 5. நித்தமும் உன் சிந்தனையே!! 6. நெஞ்சோரமாய் காதல் துளி!! 7. இதயம் தேடும் தேடல்!! 8. இதழ் திறவாய்!! 9. விட்டாலும் விலகாதே!! 10. எனை கொஞ்சும் சாரலே!! 11. ஏன்டி உன்னை பிடிக்குது!! 12. மதி ஒரு நாளும் மறவேன்!! 13. மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! 14. புல்லாங்குழலே! பூங்குழலே! 15. சாட்சி பிழையா? 16. எமபுர மாயமும் அபயனும்! 17. அரளிப்பூ ஆராதனை! 18. தழல் பட்சியவள் பைரவி! எனது கதைகள் பற்றிய உங்கள் கருத்துக்களை goms.novels@gmail.com என்ற மின்னஞ்சலிற்கு அனுப்புங்கள். உங்கள் அன்புத் தோழி, கோம்ஸ்.

阅读完整简历

书籍

我们找不到与这些筛选器相匹配的内容

买家还购买了以下作者的作品