Nandhini Sugumaran

关于作者

வணக்கம் தோழமைகளே... நான் நந்தினி சுகுமாரன். என்னோட பேரை தவிர உங்களுக்கு எதுவும் தெரியாது. சோ என்னை பத்தின சின்ன அறிமுகம். பயப்டாதிங்க, ரொம்ப மொக்கை போட மாட்டேன். நந்தினின்றது என்னோட உண்மையான பேரு இல்ல. பட் இதுவும் என்னோட பேரு தான். எங்க தாத்தா மட்டும் தான் கூப்டுவாரு. அவர் இறந்ததுக்கு அப்புறம் அதை யாரும் கூப்டுறது இல்ல. அதுனால அந்த பேரை இங்க யூஸ் பண்ணிக்கிட்டேன். எனக்கு ரொம்ப பிடிச்ச பேரும் கூட. இப்போ என்னோட குவாலிஃபிகேஷன்.. டென்த் முடிச்சு டிப்ளமோ மூனு வருஷம் படிச்சேன். பொண்ண வேலைக்கு அனுப்ப மாட்டோம்ன்னு வீட்ல தடா. ரெண்டு வருஷமா வீட்ல தின்னு தூங்கி நான் பண்ண இம்சைய தாங்க முடியாம, கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்க. அடுத்த ரெண்டாவது வருஷம் அம்மு பொறந்தா. என்னோட முதல் பொண்ணு. என்னை எனக்கே புதுசா அறிமுகம் செஞ்சவ. மேடம்க்கு இப்போ ஏழு வயசு. அடுத்ததா பாப்பு. இவங்க ரெண்டாவது பொண்ணு. ஒரு வருஷம் ஆக போகுது. எட்டு வக்கிறாங்க. அவ்ளோதான் பா நான். இரண்டு குழந்தைகளுக்கு நடுல நிறைய வருஷம் இடைவெளி. அந்த கேப்ப ஃபில் பண்ணது ஸ்டோரிஸ் தான். இல்லாட்டானா சும்மா இருக்க மனசு கண்டதையும் யோசிக்கும்ல. அதான் சும்மா கதை படிக்க ஆரம்பிச்சேன். அது காலப்போக்குல எனக்குள்ள சில கற்பனைகளை உருவாக்கி விட்ருச்சு. அதை எங்க கொட்றதுன்னு தெரியாம திணறி, எப்டியோ எழுத ஆரம்பிச்சுட்டேன்.. என்னோட கற்பனைல உருவான நிழல்களுக்கு பெயர் அடையாளம் உணர்வுகள் கொடுத்து எழுத்து மூலமா கதைகள்ல நடமாட விட்ருக்கேன். நீங்க வாசிக்கும் போது எப்டி பீல் பண்றீங்க என்கிட்ட கமெண்ட் மூலமா சொல்லுங்க. என்னுடைய கதைல உங்களுக்கு ஏதாவது சந்தேகமோ குழப்பமோ வந்தாலோ, எங்கையாவது புரியலைன்னாலோ கேளுங்க, உங்களுக்கு பதில் சொல்ல வேண்டியது என்னோட கடமை. அதே போல கதைல ஏதாவது குறை தெருஞ்சா அதையும் சொல்லுங்க. நிறைவான கருத்துக்கள் ஒருத்தரோட எழுத்துக்கு தூண்டுகோலா இருக்கும்னா, குறைகளை சுட்டிகாட்டுற கருத்துக்கள் அதை சரிபண்ணி எழுத்தாளரோட எழுத்துகளை மெருகேத்த உதவும். அதுனால ஸ்டோரி போஸ்ட்ட வாசிச்சு முடிக்கும் போது, உங்க ப்ரண்ட் கிட்ட எப்டி தோணுறதை சேர் பண்ணுவீங்களோ, என்னையும் ப்ரண்ட்டா நினைச்சு உங்களோட கருத்துக்களை பதிவு பண்ணுங்க. இது எனக்குன்னு மட்டும் இல்ல இங்க இருக்குற எல்லா எழுத்தாளர்களுக்கும் செய்யணும்ன்னு கேட்டுக்குறேன். என்றும் உங்களது அன்பையும் ஆதரவையும் வேண்டும் நான். இல்ளோ நேரம் பொறுமையா வாசிச்சதுக்கு மிக்க நன்றிகள் பா. என்றும் உங்கள்.. நந்தினி சுகுமாரன்..

阅读完整简历

书籍

我们找不到与这些筛选器相匹配的内容

买家还购买了以下作者的作品