சுகமதி என்னும் புனைப்பெயரில் 2017 ஆம் ஆண்டு முதல் கதைகளை எழுதி வருகிறேன். கண்மணி, அக்ஷயா, வெண்ணிலா, சுடர் கொடி ஆகிய மாத இதழ்களில் எனது குறுநாவல்கள் வெளியாகி வருகிறது. எனது கதைகளைப் பற்றி சொல்வதென்றால்... ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு விதமாக எழுத தோன்றுகிறது. எனது கோணங்கள் நாளுக்கு நாள் மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. அதனால், எனது கதை இதுபோலத்தான் இருக்கும் என்று எந்த வரையறையையும் என்னால் தர முடியவில்லை. ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு விதமாய் எழுதி வைத்திருக்கிறேன். சில உங்களுக்கு பிடிக்கலாம். சில உங்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமாகத் தோன்றலாம். சில உங்களின் ரசனைகளோடு ஒத்துப் போக மறுக்கலாம். ஆக, ஒரு கதையோடு என் எழுத்து இப்படித்தான் இருக்கும் என்ற வரையறை உங்களுக்கும் வேண்டாம். எந்த எதிர்பார்ப்புமின்றி வாசித்துவிட்டு உங்களுக்கு மனதில் பட்ட கருத்தினை மறக்காமல் பகிர்ந்து விட்டு செல்லுங்கள். அதை வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது கதைகளை ஆடியோ வடிவில் YOUTUBE - லும் Sugamathi Tamil Novels என்ற சேனலில் கேட்டு ரசிக்கலாம். நன்றி... பேரன்புடன், சுகமதி
阅读完整简历