வாசக நட்புகளுக்கு அன்பான வணக்கம்! இலங்கையின் வடக்கேயுள்ள சப்த தீவுகளில் ஒன்றான அனலைதீவை பூர்வீகமாகக் கொண்ட நான், நினைவு தெரிந்த நாட்களிலிருந்து வாசிப்புப் பிரியை. அழுத்தமான கதைகள், அவை இலக்கியமாக இருந்தாலும் சரி மிகவும் பிடிக்கும்; ஆழ்ந்து வாசித்துணரும் அந்தக் கணங்களில் அக்கம் பக்கம் மறந்து போவேன். அரச கதைகளின் காதலி, நான். அது மட்டுமன்றி மென் முறுவலோடு வாசிக்கக் கூடிய நாவல்கள், காத்திரமான சிறுகதைகள், உபயோகமான கட்டுரைகள் என்பவையும் என் வாசிப்பில் இருக்கும். 2014 ல், மிகவும் தற்செயலாக சிறுகதைகள் எழுத ஆரம்பித்ததில் தொடங்கிய எனது எழுத்துப் பயணம், இன்றுவரை நிதானமாகவே தொடர்கின்றது, வாசகர்கள் துணையோடு! எம் வாழ்வியலை, நான் சந்திந்த, கேட்டுணர்ந்த, சம்பவங்கள், விடயங்களை கற்பனைப் பாத்திரங்கள் மூலம் கதைகளில் உலாவிடுவதில் மிகுந்த ஆர்வம் எனக்குண்டு. எனது கற்பனை கைக்கெட்டிய தூரம் வரை தான். சிறகடித்துத் தொலைதூரம் பறந்திட இதுவரை முயவில்லை. எதிர்காலத்தில் என்னவோ பார்க்கலாம். அதேபோல், நான் இரசித்த இடங்கள், ஊர்களையும் என் எழுத்தில் வாசகர்களுக்குக் காட்டுவதிலும் ஆர்வம் அதிகம். இங்கு நான் பதிவிடும் சிறுகதைகள் , நாவல்கள் உங்கள் மனதுக்குப் பிடித்திருந்தால் அதுவே என் முயற்சிக்குக் கிடைக்கும் மிகப் பெரிய பரிசு! வாசிப்பில் நீங்கள் உணர்ந்ததை, இங்கோ அல்லது krosei@yahoo.nl என்னும் மின்னஞ்சல் மூலமோ எனக்குத் தெரிவிக்கலாம். அன்புடன், ரோசி கஜன் (ரோசி)
阅读完整简历