வாசகர்களுக்கு வணக்கம்.என் பெயர் பத்மா கிரகதுரை.நான் ஒரு தமிழ் நாவல் எழுத்தாளர்.நான்
எழுத்து துறைக்கு வந்து எட்டு வருடங்களாகிறது .கவிதைதான் எனது ஆரம்ப எழுத்து படி .பின் சிறுகதைகள் எழுத ஆரம்பித்து நாவல்களுக்குள் நுழைந்தேன். இது வரை 70 நாவல்கள் எழுதியுள்ளேன் . அவை பல்வேறு பதிப்பகங்களிலும் , மாத நாவல்களிலும் வெளி வந்துள்ளன.பத்து சிறுகதைகள் எழுதியுள்ளேன் . அவை குங்குமம் , தினமலர்- வாரமலர் போன்ற வார புத்தகங்களில் வெளியாகியுள்ளன.நாவல்களில் வரும் கதை மாந்தர்களுக்கேற்ப எனது கவிதைகள் அமையும்.உறவு நெறிமுறைகள் , கண்ணியம் காக்கும் காதல் , கணவன் - மனைவி அன்பு ,வட்டார மக்களின் வழக்குகள் , செய்முறைகள் போன்றவை எனது நாவல்களில் விரவிக் கிடக்கும்.எனது நாவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக இங்கே பதிவேற்றப்படும்.உங்களது தொடர் ஆதரவு மற்றும் கருத்துரைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் தோழமைகளே !